சுடச்சுட

  

  பஞ்சாலைகள் நவீனப்படுத்தப்படும்: எச்.நாஜிம் உறுதி

  By புதுச்சேரி,  |   Published on : 20th April 2014 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் உள்ள பஞ்சாலைகள் நவீனப்படுத்தப்படும் என திமுக வேட்பாளர் எச்.நாஜிம் கூறியுள்ளார்.

  புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் திமுக சார்பில் தேர்தல் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது. பிரசாரத்துக்கு மாநில அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

  முதலியார்பேட்டை எல்லைப்பகுதியான ரோடியர் ஆலை அருகே வேட்பாளர் நாஜிமுக்கு இரு சக்கர வாகனங்களில் ஏராளமான தொண்டர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.

  அப்போது நாஜிம் பேசியதாவது:

  நாராயணசாமி, பிரதமருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். ஆனால் மாநில அந்தஸ்து விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறார். காங்கிரஸ் ஆட்சி இருந்தவரை புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டவர், என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் கிடைக்கவே வாய்ப்பு இல்லாத சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும் எனக் கேட்டார்.

  ஏனாமில் பிரசாரம் செய்யச் சென்ற நாராயணசாமி, தற்போது புதுவைக்கு மாநில அந்தஸ்தோ, சிறப்பு மாநில அந்தஸ்தோ வேண்டாம். யூனியன் பிரதேசமாகவே தொடரட்டும் எனக் கூறுகிறார். இது அவரது இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

  முதலியார்பேட்டையில் உள்ள ரோடியர் ஆலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பு போனஸ் வழங்கியது திமுக ஆட்சி தான்.

  ஆனால் என்.ஆர். காங்கிரஸ் அரசால் ஆலை மூடப்பட்டுள்ளது. பஞ்சாலைகளை நவீனப்படுத்த திமுக நடவடிக்கை எடுக்கும்.

  காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸôல் மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. திமுக வை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் நாஜிம்.

  இந்நிகழ்ச்சியில் தொகுதிச் செயலர் திராவிடமணி, நிர்வாகிகள் அருணாசலம், லயன் சுரேஷ், ராம ஐயப்பன், நடன சபாபதி, சிவக்குமார், சீனிவாசன் உள்பட பலர் உடன் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai