சுடச்சுட

  

  புதுவை லோக் ஜனசக்தி கட்சியினர் பாமகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்.

  இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் மு.த.உமாசுதன் வெளிட்ட அறிக்கை: வரும் மக்களவைத் தேர்தலில் புதுவை மாநில லோக்

  ஜனசக்தி கட்சி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரிப்பதாக முடிவெடுத்து ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

  இந்நிலையில், தமிழக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பாமகவையே ஆதரிக்கிறது. இதனால், எங்கள் தேசிய தலைமையின் அனுமதியோடு புதுவையிலும் பாமகவையே ஆதரிப்பதென முடிவு எடுத்துள்ளோம்.

  இதனால் புதுவை மாநில லோக் ஜனசக்தி கட்சி என்.ஆர். காங்கிரஸுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்கிறது.

  லோக் ஜனசக்தி கட்சியின் பெயரை யாரேனும் தவறாகப் பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai