சுடச்சுட

  

  புதுச்சேரியில் களத்தில் உள்ள 30 பேரில் ஆறு பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள். கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி மட்டும்தான் கோடீஸ்வர வேட்பாளராக இருந்தார்.

  புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 30 வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை ஜனநாயக சீர்த்திருத்த சங்கமும், தேசிய தேர்தல் கண்காணிப்பகமும் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதன் விவரம்:

  கோடீஸ்வர வேட்பாளர்கள்: புதுச்சேரியில் களத்தில் உள்ள 30 பேரில் ஆறு பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள். கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி மட்டும்தான் கோடீஸ்வர வேட்பாளராக இருந்தார்.

  தற்போதைய கோடீஸ்வர வேட்பாளர்களின் சொத்து மதிப்பில் முதலிடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.9.18 கோடி. 2-ம் இடத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.7.77 கோடி. 3-ம் இடத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் டாக்டர் ரங்கராஜன் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.5.79 கோடி. 4-ம் இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் விசுவநாதன் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.2.71 கோடி. 5-ம் இடத்தில் அதிமுக வேட்பாளர் ஓமலிங்கம் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.2.64 கோடி. 6-ம் இடத்தில் பாமக வேட்பாளர் அனந்தராமன் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.2.46 கோடி.

  சராசரி சொத்து மதிப்பு:

  2014 நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 1.18 கோடி ஆகும். 2009-லோக் சபா தேர்தலின் போது வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.64.28 லட்சமாக இருந்தது.

  குற்றப் பின்னணி: புதுச்சேரியில் போட்டியிடும் 30 வேட்பாளர்களில், 6 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தெரிவித்துள்ளனர். 2009 மக்களவைத் தேர்தலில் தேமுதிகவைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் மீது மட்டுமே கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்தது. தற்போது இந்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

  இதில் 3 வேட்பாளர்கள் மீது கடத்தல், பணப்பறிப்பு, பொது சொத்துக்குப் பங்கம் விளைவித்தல் போன்ற கடுமையான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

  ஆறு பேரின் வழக்குகள் விவரம் அடிப்படையில் முதலிடத்தில் பாமக வேட்பாளர் அனந்தராமனும், 2-ம் இடத்தில் மரி உத்திரநாதனும் (சமதா), 3-ம் இடத்தில் சுயேச்சை வேட்பாளர் ஐ.செந்தில்குமாரும், 4-ம் இடத்தில் திமுக வேட்பாளர் நாஜிமும், 5-ம் இடத்தில் சுயேச்சை வேட்பாளர் தண்டபாணியும், 6-ம் இடத்தில் சுயேச்சை வேட்பாளர் பாக்கியராஜும் உள்ளனர்.

  கடனுள்ள வேட்பாளர்கள்:

  30 வேட்பாளர்களில் 8 பேர் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதில் அதிக கடனுள்ள வேட்பாளர்களில் அதிமுக ஓமலிங்கத்துக்கு ரூ.2.16 கோடியும், பாமக அனந்தராமனுக்கு ரூ.1.8 கோடியும், என்.ஆர்.காங்கிரஸ் ராதாகிருஷ்ணனுக்கு ரூ.76.58 லட்சமும் கடனாக உள்ளன என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai