சுடச்சுட

  

  "புதுவை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் நாராயணசாமி'

  By புதுச்சேரி,  |   Published on : 20th April 2014 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து மத்திய அமைச்சர் வாசன் சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில் வாக்குச் சேகரித்தார்.

  புதுவை நேரு வீதி, மிஷன் வீதி, சின்ன மணிக்கூண்டு, வெங்கடசுப்பாரெட்டியார் சிலை, முதலியார்பேட்டை, மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்து பேசியதாவது:

  புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து செயலாற்றியவர் மத்திய அமைச்சர் நாராயணசாமி. அவர் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுபவர். மாநில அரசு ஒத்துழைக்காதபோதும், மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்று மாநிலத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.

  காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சட்ட ஒழுங்கை பராமரிப்பதில் புதுவை முதல் மாநிலமாக, அமைதியான மாநிலமாக திகழ்ந்தது. ஆனால் தற்போது சட்டம் ஒழுங்கு கெட்டு சீரழிந்து போய்விட்டது. இந்நிலை மாறி மீண்டும் புதுவை அமைதியான மாநிலமாக மாற காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்.

  புதுவையில் உள்ள பஞ்சாலையை மூடி தொழிலாளர்களுக்கு சோதனை அளித்ததையே சாதனையாக செய்துள்ளனர்.

  வில்லியனூர் தொகுதி மக்களுக்கு 2 வர பிரசாதங்களை நமச்சிவாயம் எம்எல்ஏவின் முயற்சியால் நாராயணசாமி செய்து கொடுத்துள்ளார். அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் மற்றும் ரூ.100 கோடி செலவில் கிராமப்புறக் குடிநீர் திட்டங்களை மத்திய அரசின் முழு நிதியுடன் நாராயணசாமி வழங்கியுள்ளார்.

  சொல்வதை செய்வதுதான் காங்கிரஸ் கட்சி. இதை எண்ணிப் பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் வாசன்.

  பிரசாரத்தின் போது காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி, சட்டப்பேரவை எதிர்க் கட்சித்தலைவர் வைத்திலிங்கம், எம்எல்ஏக்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, தொகுதி தலைவர்கள் தங்கமணி, வக்கீல் முனுசாமி, ரகுமான், விநாயகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai