சுடச்சுட

  

  பேராசிரியர்கள் மீது நடவடிக்கை தேசிய மாணவர் இயக்கம் வலியுறுத்தல்

  By புதுச்சேரி,  |   Published on : 20th April 2014 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை பல்கலையில் புகாருக்குள்ளான பேராசிரியர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க தேசிய மாணவர் இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

  இது குறித்து அந்த இயக்க மாவட்டப் பொறுப்பாளர் முருகதாஸ் வெளியிட்ட அறிக்கை: புதுவை பல்கலைக்கழகத்தில், தமிழ் துறை மாணவரை இரண்டு பேராசிரியர்கள், பாதுகாவலர்கள் சேர்ந்து தனி அறையில் வைத்து துன்புறுத்தியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக மாணவர்கள் பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும், புதுவை பல்கலைக்கழகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  இது குறித்த புகாரின் பேரில், விசாரிக்க ஒழுங்கு நடவடிக்கைக்குழு அமைத்துள்ளதாக துணை வேந்தர் கூறியுள்ளார்.

  தொடர்புடைய பேராசிரியர் ஹரிகரன் மீது இதற்கு முன் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த 2004, 2008-ம் ஆண்டுகளில் மாணவர்கள் அவர் மீது பல குற்றச்சாட்டுக்களைக் கூறி போராட்டங்களை நடத்தினர். அவர் மீது சிபிஐ வழக்கும் நிலுவையில் உள்ளது.

  இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், காப்பாற்றும் முயற்சியாகவே தெரிகிறது. விசாரணைக்குழு வெறும் கண் துடைப்பே ஆகும். இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேசிய மாணவர் இயக்கம் சார்பில், புதுவை துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடமும் புகார் தெரிவிக்க உள்ளது.

  புகாருக்குள்ளான பேராசிரியர்களை உடனடியாக பதவிநீக்கம் செய்யவில்லை எனில், மாணவர்களைத் திரட்டி போராட்டத்தில்

  ஈடுபடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai