சுடச்சுட

  

  மார்க்சிஸ்ட் கட்சிக்கு தேர்தல் நிதியளிப்பு

  By புதுச்சேரி,  |   Published on : 20th April 2014 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டாக்டர் அம்பேத்கர் பயிற்சி மையம் சார்பில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு தேர்தல் நிதி புதுச்சேரியில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

  டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சியின் புதுச்சேரி மையத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு கூட்டத்துக்கு புதுச்சேரி இணை ஒருங்கினைப்பாளர் ஆர்.எம்.ராம்ஜி தலைமை வகித்தார்.

  இத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளுக்கு வாக்களிக்க வலியுறுத்தி புதுச்சேரி பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் இராச.செயராமன் பங்கேற்று பேசினார்.

  சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மார்க்சிஸ்ட் பிரதேச செயற்குழு உறுப்பினர் வே.கு.நிலவழகனிடம், பயிற்சி மையத்தின் மாணவர்களிடமிருந்து வசூலித்த தொகை ரூ.5 ஆயிரத்தை முதல் கட்ட தேர்தல் நிதியாக வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai