சுடச்சுட

  

  மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு என்.ஆர். காங்கிரஸுக்கு ஆதரவு

  By புதுச்சேரி,  |   Published on : 20th April 2014 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை அனைத்து சமுதாய நலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

  இது குறித்து அக்கூட்டமைப்பின் தலைவர் சையத்பாரூக் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் மக்களவைத் தேர்தலில், புதுவை தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு எங்கள் கூட்டமைப்பு ஆதரவளிக்கிறது.

  கடந்த 5 ஆண்டுள் மக்களவை உறுப்பினராக இருந்த நாராயணசாமி எங்களுக்கான நலத் திட்டங்களை செய்ய ஆதரவாக இல்லை.

  மாநிலத்துக்கு ஆதரவான மக்களவை உறுப்பினரை தேர்வு செய்தால், ஓய்வூதியத் தொகையை உயர்த்தி வழங்கவும், மகளிர் குழுக்களுக்கான கடன் தொகையினை தள்ளுபடி செய்யவும் முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளனர். இதனால் என்.ஆர். காங்கிரஸுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளோம்.

  எங்கள் கூட்டமைப்பில் 5,000 பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்து என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்றார்.

  இந்நிகழ்ச்சியின் போது துணைத் தலைவர் இளையராஜா, பொதுச் செயலர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai