சுடச்சுட

  

  ரங்கசாமி யார் என்றே மோடிக்கு தெரியாது: வைத்திலிங்கம்

  By புதுச்சேரி  |   Published on : 20th April 2014 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு, ரங்கசாமி யார் என்றே தெரியாது என எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

  புதுவை காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து எதிர்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் காமராஜர் நகர் தொகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் செய்து பேசியதாவது:

  தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதுவையில் யார் போட்டியிடுகிறார் என்பதே தெரியாத நிலை உள்ளது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள 2 கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர். இருவரும் தாங்கள்தான் அதிகாரப்பூர்வ வேட்பாளர் எனக் கூறி வருகின்றனர். மோடி பிரதமராக வர வேண்டும் என பிரசாரம் செய்யும் முதல்வர் ரங்கசாமியை மோடி சந்திக்கவில்லை.

  தமிழகத்தில் பிரசாரம் செய்ய வந்த மோடியும் என்.ஆர்.காங்கிரஸ் எங்கள் கூட்டணியில் உள்ளது எனக் கூறவும் இல்லை, ரங்கசாமியும் அவரை சந்திக்கவில்லை. மோடிக்கு ரங்கசாமியையும், என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியையும் தெரியாது. அப்படியிருக்க அவரிடம் சென்று எப்படி நிதியைப் பெற முடியும் இப்போதே இவ்வளவு குழப்பம் உள்ளவர்கள் நாளை எத்தகைய குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

  ரங்கசாமி தலைமையிலான கடந்த 3 ஆண்டு ஆட்சியில் சட்டஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இந்த பகுதியில் ஒரு மாணவன் கடத்தப்பட்டான். அவனை கடத்தியது யார் என இதுவரை கண்டறியவில்லை. பெண்கள் கோலம் போடக்கூட வீட்டை விட்டு வெளி யே வர முடியாத நிலை உள்ளது. வியாபாரிகள் மாமூல்கேட்டு ரவுடிகளால் தாக்கப்படுகின்றனர். இதுதான் ஆட்சியாளர்களின் நிலை

  என்றார் வைத்திலிங்கம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai