சுடச்சுட

    

    விதிமீறி விளம்பரம் ஒளிபரப்பு:கேபிள்டிவி உரிமையாளர் மீது வழக்கு

    By புதுச்சேரி,  |   Published on : 20th April 2014 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் தேர்தல் விதிகளை மீறி தொலைக்காட்சியில் விளம்பரம் செய்ததாக அதிமுக செயலர் மீதும், கேபிள்டிவி உரிமையாளர் மீதும் போலீஸôர் வழக்குப் பதிந்துள்ளனர்.

    புதுவை தேர்தல் பறக்கும்படை அதிகாரி சந்தோஷ்குமார் மற்றும் குழுவினர் அண்மையில் ஆய்வு செய்தபோது, உள்ளூர் கேபிள் தொலைக்காட்சியில் அதிமுகவுக்கு ஆதரவாக கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 17-ம் தேதி வரை தேர்தல் பிரசார விளம்பரங்கள் ஒளிபரப்பாகியுள்ளதாகத் தெரிகிறது.

    தேர்தல் துறையில் முன் அனுமதி பெறாமலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி விளம்பரம் செய்யப்பட்டுள்ளதால் இது குறித்து, பறக்கும் படையினர் போலீஸில் புகார் அளித்தனர்.

    இதன் பேரில், தொலைக்காட்சி உரிமையாளர் சந்துரு மீதும், அதிமுக செயலர் மீதும், வியாழக்கிழமை புதுவை முத்தியால்பேட்டை போலீஸôர் தேர்தல் விதி மீறல் வழக்குப் பதிந்துள்ளனர்.

    இதேபோல், புதுவை பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை அனுமதியின்றி காரில் பேனர் வைத்து தேர்தல் பிரசாரம் செய்த கொம்பாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் மீது, தேர்தல் அதிகாரி விமலன் கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai