சுடச்சுட

  

  புதுவையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ஆவணமின்றி காரில் எடுத்துச் சென்ற 150 சவரன் பறிமுதல் வெள்ளிக்கிழமை இரவு செய்யப்பட்டது.

  புதுவை தேர்தல் பறக்கும் படை துணை வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை இரவு சென்னை-புதுவை கிழக்கு கடற்கரைச் சாலை, மாநில எல்லைப் பகுதியான கனகசெட்டிக்குளம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது, சென்னையிலிருந்து புதுவைக்கு வந்த காரை சோதனை செய்தபோது சுமார் ரூ.35 லட்சம் மதிப்பிலான 150 சவரன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் தக்க ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்துச் சென்றது தெரிந்

  தது. காரில் வந்த லாஸ்பேட்டையைச் சேர்ந்த வினோத் (32), அன்புமணி (40) ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், புதுவையில் உள்ள தனியார் நகைக் கடைக்கு சென்னையிலிருந்து நகைகள் வாங்கிச் செல்வதாக கூறினர்.

  ஆனால் நகைக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், போலீஸôர் அவர்களை புதுவை வணிகவரித் துறையினரிடம் ஒப்படைத்தனர். வணிகவரித் துறையினர் நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai