சுடச்சுட

  

  காரைக்காலில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையின்போது 200 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  கோட்டுச்சேரி பகுதியில் துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொறையாறை நோக்கி செல்லும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஒரு மூட்டையையும் கொண்டு வந்தார். அந்த வாகனத்தை அதிகாரிகள் நிறுத்தியபோது, அவர்கள் பறக்கும் படையினர் என்பதை அறிந்த அந்த நபர் வாகனத்தில் இருந்த மூட்டையை வாய்க்காலில் எறிந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டார். வாய்க்காலில் கிடந்த மூட்டையை பிரித்துப் பார்த்தபோது, அதில் 200 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை மீட்டு கலால் துறையினரிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai