அமைச்சர் தீவிர தேர்தல் பிரசாரம்
By புதுச்சேரி, | Published on : 21st April 2014 04:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் என்.ஜி. பன்னீர்செல்வம் உழவர்கரையில் ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக வாக்குச் சேகரித்தார்.
அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, சாலைத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர், பிச்சவீரன்பேட்டை ஆகிய பகுதிகளில் அவர் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.
என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் தாமோதரன் , ஜோசப், பழனிச்சாமி, பிரசன்னா, வெங்கட், வெங்கடேசன், பாபு உள்பட பலர் உடனிருந்தனர்.