சுடச்சுட

  

  புதுவையில் மீண்டும் தேர்தல் நடத்தி உள்ளாட்சி அமைப்புகள் வலுப்படுத்தப்படும் என்று சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் எம்பி மு.ராமதாஸ் வாக்குறுதியளித்தார்.

  புதுவையில் பாமக முன்னாள் எம்பி மு.ராமதாஸ் மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

  புதுவை வேட்பாளர்கள் பலர் தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் பிரசாரம் செய்கின்றனர்.

  நான் தேர்தல் அறிக்கையை நம்பியே போட்டியிடுகிறேன். புதுவைக்கும், காரைக்காலுக்கும் அந்தந்தப் பகுதித் தேவைகளை முன் வைத்து தனித்தனி தேர்தல் அறிக்கையை வைத்துள்ளேன்.

  புதுவை மக்கள் அறிவார்ந்தவர்கள், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

  மாநிலத்தின் முக்கியத் தேவையான சிறப்பு நிதிச் சலுகையோடு கூடிய மாநில அந்தஸ்தை பெற்றுத் தர பாடுபடுவேன். மாநிலத்துக்காக கூடுதல் அதிகாரமும் பெறப்படும்.

  பொதுப்பணியாளர் தேர்வாணையம், உயர் கல்விக் கழகம், தொழில்நுட்ப பூங்கா போன்ற புதிய திட்டங்களை கொண்டு வருவேன்.

  மீண்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, அதிகாரம், நிதி ஆதாரங்கள் பெற்று உள்ளாட்சிகள் வலுப்படுத்தப்படும்.

  சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகள் தடுக்கப்படும். புதுவையில் போக்குவரத்தை சீரமைக்க 3 மேம்பாலங்கள், விழுப்புரம், கடலூர் சாலையில் நான்கு வழிச் சாலைகள், வாராந்திர ரயில்களை தினசரி இயக்குதல், திண்டிவனம்-புதுவை-கடலூர் மார்க்க புதிய ரயில்பாதை, ஜிப்மர் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

  இதனால் தன்னை ஆதரிக்க வேண்டும் என்றார் பேராசிரியர் ராமதாஸ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai