சுடச்சுட

    

    ஏனாம் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் நிறைவேறவில்லை: அதிமுக புகார்

    By புதுச்சேரி,  |   Published on : 21st April 2014 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏனாம் பகுதியில் வளர்ச்சிப் பணிகளே நடைபெறவில்லை என அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் எம்எல்ஏ புகார் கூறியுள்ளார்.

    புதுவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்துக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் ஏனாமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏனாம் தொகுதி செயலர் மங்கலா சாய்குமார் வரவேற்றார். மாநிலச் செயலர் அன்பழகன் வாக்குச் சேகரித்து பேசியதாவது:

    ஏனாம் பகுதி மக்கள் காங்கிரஸ் எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணாராவின் பிடியிலிருந்து விடுதலையாக வேண்டும். பல அரசு விழாக்களை புதுவையில் புறக்கணித்து வரும் நாராயணசாமியும், ரங்கசாமியும் ஏனாமில் நடைபெறும் விழாக்களில் மட்டும் தவறாமல் கலந்து கொள்கின்றனர்.

    மல்லாடி கிருஷ்ணாராவின் செயல்பாடுகளுக்கு முதல்வரும், மத்திய அமைச்சரும் துணை போகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பிரதான கொள்கையான மாநில அந்தஸ்து பிரச்னையில் ஏனாம் மக்களை ஏமாற்றும் விதத்தில் புதுவை யூனியன் பிரதேசமாகவே தொடரும், அதற்கு காங்கிரஸ் ஆதரவாக இருக்கும் என நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுவை சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து வேண்டும் என காங்கிரஸ் கட்சி 8 முறைக்கு மேல் தீர்மானம் நிறைவேற்றியது. மல்லாடியும் அப்போது அமைச்சராக இருந்தார். மாநில அந்தஸ்து தொடர்பான தீர்மானம் நிறைவேற்றிய போது மல்லாடி பதவியை விட்டு விலகினாரா என மக்கள் உணர வேண்டும்.

    ஏனாம் பகுதியில் 3,000 தொழிலாளர்கள் பணிபுரிந்த டைல்ஸ் ஆலை மூடப்பட்டு விட்டது. அதைத் திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே வரும் தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் அன்பழகன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai