சுடச்சுட

  

  காங்கிரஸ் பெயரை வைத்துக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி ஏன்?

  By புதுச்சேரி  |   Published on : 21st April 2014 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கட்சிக்கு காங்கிரஸ் பெயரை வைத்துக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது ஏன்? என முதல்வர் ரங்கசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

  இடதுசாரி கட்சிகள் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.விசுவநாதனுக்கு வாக்குச் சேகரிக்கும் பிரசாரக் கூட்டம் பாகூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

  இக் கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கொம்யூன் செயலர் த.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ பேசியதாவது: மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி நிழல் பிரதமராகவே இருந்தார். அப்படிப்பட்ட வாய்ப்பைப் பெற்ற அவர், புதுவை வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை பெற்றுக் கொடுத்தாரா இல்லையே.

  அதேபோல் முதல்வர் ரங்கசாமி விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் புதிய திட்டங்களைக் கொண்டு வந்தாரா இல்லையே.

  மாறாக ரங்கசாமி காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து என்.ஆர்.காங்கிரஸ் பெயரில் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

  காங்கிரஸ் பெயரை வைத்துக் கொண்டு எப்படி பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளார். புதுச்சேரி மக்கள் இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

  இடதுசாரி கட்சி வேட்பாளர் ஆர்.விசுவநாதன் விலைவாசி பிரச்னை, விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளை அமல்படுத்தும் மத்திய காங்கிரஸ், முந்தைய பாஜக அரசை எதிர்த்து போராடி வருபவர்.

  எனவே புதுச்சேரி வாக்காளர்கள் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் பாலகிருஷ்ணன்.

  இந்நிகழ்ச்சியில் பிரதேசக் குழு உறுப்பினர்கள் பத்மநாபன், சரவணன், கொம்யூன்குழு உறுப்பினர்கள் ராமசாமி, கலியன், அரிதாஸ், செல்வராசு, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ராமமூர்த்தி, கலியமூர்த்தி, விஜயபாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai