சுடச்சுட

  

  காங்கிரஸ் வாகனங்களுக்கு இலவச பெட்ரோல்: பங்க் உரிமையாளர் மீது வழக்கு

  By புதுச்சேரி,  |   Published on : 21st April 2014 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி அருகே வில்லியனூரில் தேர்தல் விதிகளை மீறி காங்கிரஸ் வாகனங்களுக்கு இலவசமாக பெட்ரோல் போட்டதாக பங்க் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  கூடப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற 150 பைக்குகளுக்கு இலவசமாக பெட்ரோல் போட்டதாகக் கூறப்படுகிறது.

  அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரி இளந்திரையன் இது தொடர்பாக வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

  அதன் பேரில் போலீஸார் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  5 வாகனங்கள் பறிமுதல்:

  என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் உருளையன்பேட்டையில் தேர்தல் பிரசாரம் செய்த போது, விதிகளை மீறி 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி லட்சுமணன் புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து 5 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

  இதேபோல் திருவண்டார் கோயிலைச் சேர்ந்த கே.தனசேகரன் என்பவர் மீது விதிகளை மீறி ஊர்வலமாகச் சென்றதாக தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai