சுடச்சுட

    

    புதுச்சேரி தொகுதியில் மொத்தம் உள்ள 905 வாக்குச் சாவடிகளிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன என தலைமை தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

    புதுவை மாநிலத்தில் மொத்தம் 9,01,357 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் உள்ள 905 வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறைகள், வரிசையில் நிற்க பந்தல்கள், சாய்தள படிகள் முதலியவை செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு உதவிடும் வகையில் வாக்காளர் உதவி மையங்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.

    புதுவை வாக்காளர்கள் அனைவரும் வரும் 24-ம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலில் காலை

    7 மணி முதல் மாலை 6 மணிக்குள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றார் ஸ்ரீகாந்த்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai