சுடச்சுட

  

  "திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது'

  By புதுச்சேரி,  |   Published on : 21st April 2014 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என மாநில அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  புதுவையில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

  புதுவை பிராந்தியத்தில் 25 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக வேட்பாளர் பிரசாரம் செய்து முடித்துள்ளார். தற்போது காரைக்கால், ஏனாம் பகுதிகளில் வாக்குச் சேகரித்து வருகிறார்.

  வரும் 22-ம் தேதி மாஹே பகுதியில் பிரசாரம் செய்யவுள்ளார். அரியாங்குப்பம், உருளையன்பேட்டை, நெட்டபாக்கம், ராஜ்பவன், உப்பளம் ஆகிய தொகுதிகளிலும் பிரசாரம் செய்யவுள்ளார்.

  காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இவர்கள் மீதுள்ள அதிருப்தியால் திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. நீண்ட காலத்துக்குப்பின் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக போட்டியிடுவது தொண்டர்களிடையே மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கிராமப்பகுதிகளில் வலுவாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு திமுகவின் வெற்றியை பிரகாசப்படுத்தி உள்ளது என்றார் சுப்பிரமணியன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai