சுடச்சுட

  

  புதுச்சேரியில் பல்வேறு தேவாலயங்களில் ஈஸ்டரை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர். இதை முன்னிட்டு கடந்த 13-ம் தேதி குருத்தோலை ஞாயிறுடன் புனித வாரச் சடங்குகள் தொடங்கின.

  மார்ச் மாதம் முதல் கிறிஸ்துவர்கள் தவக்கால கடைப்பிடித்தனர்.

  புனித வியாழன், பெரிய வெள்ளி அன்று விரதம் மேற்கொண்டு தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வில் பங்கேற்றனர்.

  இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு அனைத்துத் தேவாலயங்களிலும் ஈஸ்டர் திருநாள் விழா நடைபெற்றது. புதுவை ஜெனமராக்கினி பேராலயம், இதய ஆண்டவர் பசிலிக்கா, நெல்லித்தோப்பு விண்ணேற்பு மாதா, அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை, வில்லியனூர் லூர்த்து அன்னை தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகளில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

  இயேசு கிறிஸ்து உயிர்ப்பின் காட்சி நினைவு கூரப்பட்டு, 40 நாள் கிறிஸ்தவர்கள்

  உபவாசமும் நிறைவடைந்தது.

  காரைக்கால்

  காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  இயேசு கிறிஸ்து யூதர்களால் சிலுவையில் அறையப்பட்ட 3-வது நாள் உயிர்த்தெழும் தினத்தை, ஈஸ்டர் தினமாக கிறிஸ்தவ மக்கள் உலகமெங்கும் கொண்டாடுகின்றனர்.

  காரைக்காலில் உள்ள புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் சீடர்களுக்கு பாதம் கழுவும் நிகழ்ச்சி, புனித வெள்ளி சிறப்பு திருப்பலி உள்ளிட்டவை நடைபெற்றன.

  புனித வெள்ளி முடிந்து 3-வது நாள் இயேசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறைவட்ட பங்கு குரு அந்தோணி லூர்துராஜ் தலைமையில் பங்கு குருக்கள் அந்தோணிராஜ், விக்டர் இமானுவேல், அமல்ராஜ், அருள்ராஜ்சாமி கூட்டு திருப்பலி நடத்தினர். இதில் ஏராளமான மக்கள்

  கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai