சுடச்சுட

    

    புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    சோரியாங்குப்பம் முருகன்கோயில் தெருவைச் சேர்ந்த நாதன் (60). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் நிலத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சனிக்கிழமை மாலை நிலத்தின் உரிமையாளர் கிருஷ்ணகுமார் நிலத்தைப் பார்வையிட வந்த போது, ஒதுக்குப்புறமான இடத்தில் நாதன் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து பாகூர் காவல் நிலையத்தில் கிருஷ்ணகுமார் புகார் செய்ததன் பேரில் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நாதன் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai