சுடச்சுட

  

  புதுச்சேரி சேவாலயம், இ.எஸ்.நர்சிங் கல்லூரி, ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி ஆகியன சார்பில் நோய் ஆற்றுப்படுத்துதல் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் பொற்செல்வி தொடக்கவுரை ஆற்றினார். மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி துணைப் பேராசிரியர் பிரசாத் அன்பின் வழி மருத்துவம் குறித்து பேசினார். சேவாலயம் நிர்வாக இயக்குநர் சித்ரா சங்கர் ஊட்டச்சத்தான உணவு உண்பதின் அவசியம் குறித்து பேசினார். சத்துணவு ஆரோக்கியமான தேசத்துக்கு வழி என்ற தலைப்பில் டாக்டர் குருமூர்த்தி பேசினார். விநாடி-வினா போட்டியில் வென்றவர்களுக்கு நர்சிங் கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வி பரிசளித்தார். இயக்குநர் ராமதாஸ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai