சுடச்சுட

  

  புதுச்சேரியை அடுத்த பாகூரில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

  சோரியாங்குப்பம் பகுதியில் வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக மதுபாட்டில்கள் பதுக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து ஞாயிற்றுக்கிழமை பாகூர் போலீஸார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

  தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள தனியார் நிலத்தில் மோட்டார் அறையில் 4 சாக்கு மூட்டைகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.10 ஆயிரம். அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

  விசாரணையில் மதுபாட்டில்கள் சோரியாங்குப்பம் தெற்குத் தெருவைச் சேர்ந்த தேசிங்கு என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரணை நடந்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai