சுடச்சுட

  

  புதுவை அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி

  By புதுச்சேரி  |   Published on : 21st April 2014 04:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை அருகே குழந்தைக்கு அரளி விதை கொடுத்து கொன்ற தாய் தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

  அரியாங்குப்பம் அடுத்த மணவெளி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரேணுகாவதி (21). இவர்களது மகள் செங்கேணி (6). இச்சிறுமி உப்பளத்தில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

  கணவனுடன் தகராறு ஏற்பட்டதால் 6 மாதங்களாக தாய் வீட்டில் ரேணுகாவதி தங்கி இருந்தார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக ரேணுகாவதி மனவேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

  இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உணவில் அரளி விதையை அரைத்து கலந்து குழந்தை செங்கேணிக்கு கொடுத்துள்ளார்.

  குழந்தை சிறிது நேரத்திலேயே உயிரிழந்து விட்டது. தானும் அரளி விதையை உண்டார்.

  இந்நிலையில் சனிக்கிழமை மாலையில் வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு குழந்தையுடன் சென்ற ரேணுகாதேவி கணவர் சந்திரசேகரன் மீது புகார் கூறி உள்ளார்.

  குழந்தை தலை தொங்கிய நிலையில் இருந்ததால் சந்தேகமடைந்து போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில் குழந்தைக்கு உணவில் விஷம் கலந்து தந்ததை கூறினார். போலீஸார் உடனே குழந்தையை வில்லியனூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

  குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து பல மணி நேரம் ஆனதாகத் தெரிவித்தனர். ரேணுகாதேவியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

  இதுதொடர்பாக வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ. ராஜேஸ்வரி புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  சிகிச்சை முடிந்து வந்தவுடன் ரேணுகாதேவியை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai