சுடச்சுட

  

  புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களும் ஒன்றாக இருக்கவே, புதுவை யூனியன் பிரதேசமாக தொடர விரும்புகிறோம் என காங்கிரஸ் வேட்பாளர் வி.நாராயணசாமி கூறியுள்ளார்.

  புதுச்சேரி உழவர்கரை பகுதியில் சனிக்கிழமை இரவு ஐஎன்டியூசி, காங்கிரஸ் சார்பில் பிரசாரம் நடைபெற்றது.

  வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்து நாராயணசாமி பேசியது: புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் மத்திய அரசின் 30 சதவீத நிதிதான் கிடைக்கும்.

  மேலும் காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு விடும். அரசு ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும்.

  அனைத்துப் பிராந்தியங்களும் ஒன்றாக இருக்க வேண்டும், அரசு ஊழியர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கருதியே யூனியன் பிரதேசமாகவே இருந்து விடுவது நல்லது என நாங்கள் விரும்புகிறோம். ஆனால் ரங்கசாமி தனக்கு மட்டும் அதிகாரம் வேண்டும் என்பதற்காக, மாநில அந்தஸ்து வேண்டும் எனக் கேட்கிறார்.

  சந்தர்ப்பவாதி யார்?: நாராயணசாமி ஒரு சந்தர்ப்பவாதி என ரங்கசாமி கூறியுள்ளார். நான் காங்கிரஸ் கட்சியின் தொண்டன். எந்த கட்சிக்கும் மாறவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறேன். ஆனால் ரங்கசாமி ஜனதா கட்சியிலிருந்து காங்கிரஸýக்கு வந்தவர். ஏழரை ஆண்டுகள் அமைச்சராக, முதல்வராக இருந்தவர். பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு காங்கிரஸýக்கு துரோகம் இழைத்தார். தனிக்கட்சி தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.

  தேர்தலுக்குப்பின் அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டு தனித்து ஆட்சி அமைத்தார். தற்போது பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்போது கூறுங்கள் யார் சந்தர்ப்பவாதி? நானா சந்தர்ப்பவாதி?

  ரங்கசாமியின் சாதனை: 3 ஆண்டாக எதையும் செய்யாத ரங்கசாமி மீது மக்கள் அதிருப்தியடைந்து மாற்றத்தை விரும்புகின்றனர். காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் ரங்கசாமி தற்போது நிறுத்தி விட்டார். 26 ஆயிரம் முதியோருக்கு உதவித்தொகையை நிறுத்தி ரங்கசாமி சாதனை படைத்துள்ளார் என்றார் நாராயணசாமி.

  பிரசாரத்தின்போது ஐஎன்டியூசி மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன், இ.நமச்சிவாயம் எம்எல்ஏ உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai