சுடச்சுட

  

  புதை சாக்கடை திட்ட ஊழல் குறித்து சிபிஐ விசாரணை

  By புதுச்சேரி  |   Published on : 21st April 2014 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் புதுச்சேரி புதை சாக்கடை திட்ட ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வேட்பாளர் எச்.நாஜிம் தெரிவித்துள்ளார்.

  புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பத்தில் திமுக சார்பில் தேர்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிரசாரத்துக்கு மாநில அமைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

  துணை அவைத் தலைவர் சீத்தா வேதநாயகம், நிர்வாகிகள் செ.சக்திவேல், ஜெ.வேலன், சீத்தாராமன், மகளிர் அணித் தலைவர் தனலட்சுமி, கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  பிரசாரத்தில் வேட்பாளர் நாஜிம் பேசியதாவது: கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது புதுவையில் புதை சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற ரூ.252 கோடி ஒதுக்கப்பட்டது.

  இதற்கான பணிகள் கறுப்புப் பட்டியலிருந்த ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்நிறுவனம் ஒப்பந்தத்தின்படி தரமான பொருள்களை பயன்படுத்தாமல் தரமற்ற பொருள்களையே பயன்படுத்துகிறது.

  இத்திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. ஆளும் கட்சி எம்எல்ஏ அசோக் ஆனந்த் இம்முறைகேடு குறித்து சட்டப்பேரவையில் பேசிய போதும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

  அதேபோல் கடந்த ஆட்சியில் குப்பை அகற்ற டெண்டர் விடப்பட்டது.

  இதற்கும் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தொகை நிர்ணயித்தனர். மேலும் குப்பை எடுத்துச் செல்ல வாகனங்களை அரசே வாங்கித் தந்தது.

  இந்த ஊழல்கள் தொடர்பாகவும் என்.ஆர். காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஊழலில் தொடர்புடையவர்கள் தனது உறவினர்கள் என்பதால் முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்கவில்லையா.

  கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது இந்த 2 ஊழல்கள் குறித்து தான் அவர் வாக்குச் சேகரித்தார். ஆனால் ஆட்சியில் அமர்ந்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  எனவே புதுவையில் நடந்துள்ள ஊழல்களில் காங்கிரஸைப் போல் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு உள்ளது. திமுக வென்றால் புதை சாக்கடைத் திட்ட ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  பிற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்து புதுவையில் விலை உயர்த்தப்படுகிறது. யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு 70 சதவீதம் நிதி வழங்க வேண்டும். ஆனால் மத்திய அரசு 30 சதவீதம் மட்டுமே வழங்கியுள்ளது.

  மத்திய அமைச்சர் நாராயணசாமி தற்போது மாநில அரசுக்கு 50 சதவீதம் நிதியைப் பெற்றுத் தருவேன் என பொய்யான வாக்குறுதி அளித்து வருகிறார்.

  மீண்டும் ரங்கசாமி, நாராயணசாமி ஆகியோர் புதுவையை வென்றால் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என்றார்

  நாஜிம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai