சுடச்சுட

  

  மத்திய அரசு வரிச் சலுகை அளிக்காததால் தொழிற்சாலைகள் வெளியேறின: ரங்கசாமி

  By புதுச்சேரி,  |   Published on : 21st April 2014 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசு வரிச் சலுகை வழங்காததால் தான் புதுவையில் இருந்து தொழிற்சாலைகள் வெளியேறி விட்டன என முதல்வர் ரங்கசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

  புதுவை எம்.பி. தொகுதி என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து ஊசுடு தொகுதியில் முதல்வர் ரங்கசாமி சனிக்கிழமை இரவு பிரசாரம் செய்து பேசியதாவது:

  சேதராப்பட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் கொண்டு வருவதற்கு மாநில அரசு திட்டம் தீட்டி மத்திய அரசுக்கு அனுப்பியது. இத் திட்டத்துக்கு ம் மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போனது.

  இந்த திட்டத்தை பெற்றுத்தர மத்திய அமைச்சர் நாராயணசாமி எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

  வரிச் சலுகை மறுப்பு: புதுவையில் உள்ள தொழிற்சாலைக்கு வரிச் சலுகை கேட்டு மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தியாகிவிட்டது. ஆனால் எந்த சலுகையும் மத்திய அரசு அளிக்கவில்லை. இதனால் இங்குள்ள பெரிய தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்குச் சென்று விட்டன. இதனால் பாதிக்கப்படுவது புதுவை இளைஞர்கள்தான். வரிச் சலுகை கிடைத்திருந்தால் நமது மாநிலத்திலேயே ஆலைகள் செயல்பட்டிருக்கும். இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்.

  தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கவும் அரசு திட்டமிட்டது. அதற்கும் மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை.

  மாநிலத்துக்கு ஒரு துளி நன்மையும் செய்யாத மத்திய அமைச்சர் தோற்கடிக்கப்பட வேண்டும். என் ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றால் மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வார்.

  நமக்கு இணக்கமான மத்திய அரசு மூலம் புதுவைக்கு தேவையான அனைத்துத் திட்டங்களையும், நிதியையும், எளிதில் பெற்று புதுவையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லலாம். எனவே அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் ரங்கசாமி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai