சுடச்சுட

  

  மைனர் பெண்ணுக்குத் திருமணம்: பெற்றோர், கணவர் மீது வழக்கு

  By புதுச்சேரி  |   Published on : 21st April 2014 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் மைனர் பெண்ணுக்குத் திருமணம் செய்யப்பட்டது தொடர்பாக பெற்றோர், கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  புதுவை முத்திரையர்பாளையம், காந்தி திருநல்லூர்பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்த மாரியப்பன்.

  மாட்டுவண்டித் தொழிலாளி. இவரது மனைவி சின்னப்பொண்ணு. இவர்களின் மகளுக்கு 18 வயது முடிய இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி பாபு என்பவருக்கு மகளை மாரியப்பன் திருமணம் செய்து வைத்தார்.

  இத்திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த அப்பெண் கணவருடன் செல்ல விரும்பவில்லை. ஆனால் மகளை கொடுமைப்படுத்தி கணவருடன் சென்று வசிக்குமாறு பெற்றோர் கூறியுள்ளனர்.

  இத்திருமணம் தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவுக்கு புகார் வந்தது.

  இதுகுறித்து குழுவின் தலைவர் வித்யா ராம்குமார் மோட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

  குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு அதிகாரிகளும், போலீஸாரும் முத்திரையர்பாளையத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

  அதில் மாரியப்பன் மகளுக்கு திருமணம் நடைபெற்றது உண்மை எனத் தெரியவந்தது.

  அதன்பேரில் குழந்தை திருமண தடைச் சட்டப்பிரிவின் கீழ் பெண்ணின் பெற்றோர் மாரியப்பன்-சின்னப்பொண்ணு, கணவர் பாபு ஆகியோர் மீது எஸ்.ஐ. பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai