சுடச்சுட

  

  காரைக்காலில் அரசலாற்றில் நிறுத்தப்பட்டிருந்த இரும்பு விசைப் படகு, கயிறு அறுந்தால் ரயில்வே பாலத்தில் மோதி நின்றது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பாலத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

  காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகுகள் கட்டப்படுகின்றன. தமிழகம் உள்ளிட்ட பிற மாநில விசைப்படகுகள் வந்தால், துறைமுகத்திற்கு வெளியே அரசலாறு, முல்லையாறு இணையுமிடத்தில் நிறுத்தப்பட்டு வருகின்றன.

  இந்த நிலையில், ஜெகதாப்பட்டினம் செல்லக்கண்ணு என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்ட விசைப்படகை, காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு சுனாமி நகர் ராஜா என்பவர் இயக்கி வருகிறார். இந்தப் படகு அரசலாற்றில் கட்டப்பட்டிருந்தது. சனிக்கிழமை இரவு, இந்த படகை கட்டியிருந்த கயிறு அறுந்ததால், அலையில் நகர்ந்து சென்று ரயில்வே பாலத்தில் படகு மோதி நின்றது. படகு மெதுவாக நகர்ந்து சென்று மோதியதால் ரயில்வே பாலத்தின் கான்கிரீட் தூண்கள் சேதமடையாமல் தப்பின.

  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள், படகை உடனடியாக அப்புறப்படுத்தினர்.

  இதற்கிடையே, காரைக்கால் மீன்வளத் துறை, தமிழக விசைப் படகுகள் காரைக்காலுக்குள் நுழைவதில் உரிய கட்டுப்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். கண்காணிப்புகளை பலப்படுத்த வேண்டும் என உள்ளூர் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai