சுடச்சுட

  

  வாக்களிக்க கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்: ஆட்சியர் அறிவிப்பு

  By காரைக்கால்  |   Published on : 21st April 2014 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாக்குச் சாவடிக்கு வாக்காளர்கள் கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் எவை என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அ. முத்தம்மா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாக்களிக்க வரும் வாக்காளர்கள் தங்கள் அடையாளத்தின் நிரூபணமாக, வாக்காளர் அடையாள அட்டை அல்லது வாக்காளர் புகைப்பட சீட்டு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்திய தேர்தல் ஆணையம், மேற்கண்டவற்றை காண்பிக்க இயலாதவர்கள், கீழ்க்காணும் ஆவணங்கள் கொண்டு வரலாம் என்று அறிவித்துள்ளது.

  பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், அரசின் கீழ்வரும் நிறுவனங்கள் மூலம் ஊழியர்களுக்கு வழங்கியுள்ள புகைப்பட அடையாள அட்டை, வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் வழங்கிய புகைப்படத்துடனான கணக்குப் புத்தகம், வருமானவரித் துறை நிரந்தர கணக்கு அட்டை, ஆதார் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளர் வழங்கிய விரைவூக்க அட்டை (ஸ்மார்ட் கார்டு), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வரலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai