சுடச்சுட

  

  புதுச்சேரியில் கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்த பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டனர்.

  தேர்தல் துறை சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு, நேர்மையான முறையில் வாக்களிப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

  இந்நிலையில் கடந்த 2009, 2011-ம் ஆண்டு தேர்தல்களில் புதுவையில் வாக்குப்பதிவு குறைந்த பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் துறை திட்டமிட்டது.

  அதன்படி புதுவை காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தைச் சேர்ந்த 60 மாணவ, மாணவியர் வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் பகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களை சந்தித்தனர்.

  வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி தேர்தலில் தவறாமல் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விளக்கினர். கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே இப்பிரசாரத்தை வாக்காளர் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு அலுவலர் செழியன்பாபு தொடங்கி வைத்தார்.

  புதுச்சேரி நகர எல்லையில் உழவர்கரை, கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர், லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், உருளையன்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து காணப்பட்டது.

  இப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வாக்களிக்க அழைப்புக் கடிதம் தரப்படும்.

  முதன்முறையாக வாக்களிக்கப்போகும் மாணவ, மாணவியரும் இப்பிரசாரத்தை பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai