சுடச்சுட

  

  100 சதவீத வாக்குப்பதிவு: கிராமங்களில் விழிப்புணர்வுப் பிரசாரம்

  By புதுச்சேரி,  |   Published on : 21st April 2014 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி தேர்தல் துறை, மத்திய அரசு கள விளம்பரத் துறை ஆகியன சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கிராமப்புறங்களில் சனிக்கிழமை விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.

  மண்ணாடிப்பேட்டை கொம்யூனுக்குள்பட்ட திருக்கனூர்பேட், புதுக்குப்பம், குச்சிப்பாளையம், புராணசிங்குபாளையம், வாதானூர், சோம்பட்டு, கொடாத்தூர், மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் கள விளம்பர அலுவலர் சிவக்குமார், உதவியாளர் தியாகராஜன் ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

  100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மக்களுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது.

  இதுவரை மக்களவைத் தேர்தல்களில் 55 சதவீதம் முதல் 64 சதவீத வரை வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. குறிப்பாக 8-வது மக்களவைத் தேர்தலில் மொத்தம் 64 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

  கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் 58 சதவீதம் பதிவானது. வரும் தேர்தலில் இதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

  மேலும் நோட்டா குறித்தும், வாக்களிக்க பணம் தருவதும், பெறுவதும் குற்றம் என்பது குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai