சுடச்சுட

    

    அடுத்த 2 ஆண்டுகளில் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்

    By காரைக்கால்  |   Published on : 22nd April 2014 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அடுத்த 2 ஆண்டுகளில் பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி.

    காரைக்காலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஆர். ராதாகிருஷ்ணனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதிகளில் முதல்வர் என். ரங்கசாமி பிரசாரம் செய்தார். காரைக்கால் தெற்குத் தொகுதிக்குள்பட்ட மதகடிப் பகுதியில் வாக்காளர்களிடையே அவர் பேசியது:

    கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசின் நெருக்கடிகள், இணை அமைச்சர் வி. நாராயணசாமி கொடுத்த நெருக்கடிகளிடையே ஆட்சி நடத்தி வருகிறோம். புதுவைக்கு கிடைக்க வேண்டிய நிதி மற்றும் திட்ட உதவிகளை தடுத்து வந்தவர் அவர். இதனால் வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

    மத்தியில் அமையும் புதிய அரசின் மூலம் புதுவைக்கு வரவேண்டிய திட்டங்கள், நிதியுதவிகளை பெறுவோம். அதற்கு மத்தியில் அமையும் அரசில் நாமும் அங்கம் பெறவேண்டியது அவசியமாகிறது. இதன் மூலம் புதுவை சிறந்த வளர்ச்சியை எட்டும். அடுத்த 2 ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விடுவோம்.

    எனவே, மக்கள் என்ஆர்.காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai