சுடச்சுட

    

    "அதிக மதுபானக் கடைகளை திறந்ததே ரங்கசாமி அரசின் சாதனை'

    By காரைக்கால்  |   Published on : 22nd April 2014 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்ததே ரங்கசாமியின் சாதனை என்றார் புதுவை மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் வி. பெருமாள்.

    புதுவை இடது முன்னணி வேட்பாளர் ஆர். விஸ்வநாதனை ஆதரித்து, கோட்டுச்சேரியில் வாக்கு சேகரிப்பில் திங்கள்கிழமை ஈடுபட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

    மத்தியில் ஆண்ட பாஜக, காங்கிரஸ் அரசுகளால் மக்களுக்கு பயனேதும் இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இதனால், நாடு முழுவதும் இடதுசாரிகளுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. திமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக, திமுகவால் எதுவும் பேசமுடியவில்லை.

    மதவாத சக்தியான பாஜகவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த 3 ஆண்டு கால ரங்கசாமி ஆட்சியில் மின் கட்டணம், பால் விலை, பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் ஏராளமான மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுவே ரங்கசாமியின் சாதனை.

    புதுவைக்கு வரவேண்டிய நிதியை தடுத்து, நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தியதில் நாராயணசாமிக்கு பெரும் பங்கு உண்டு. புதுவை மக்கள் நடக்கவுள்ள தேர்தலில் ரங்கசாமி, நாராயணசாமிக்கு சரியான பாடம் புகட்டி, இடது முன்னணியை ஆதரிக்கப் போவது நிச்சயம் என்றார் அவர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் முருகன், காரைக்கால் வட்ட செயலர் அ.வின்சென்ட் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai