சுடச்சுட

  

  ஏஎப்ஃடி ஆலையை நவீனப்படுத்த முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார்?

  By புதுச்சேரி  |   Published on : 22nd April 2014 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் பழமை வாய்ந்த ஏஎப்ஃடி ஆலையை நவீனப்படுத்த முதல்வர் ரங்கசாமி என்ன நடவடிக்கை எடுத்தார் என காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.

  முதலியார்பேட்டை பகுதியில் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்து அவர் பேசியது:

  புதுவையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்க்கை அளித்துள்ளது ஏஎப்ஃடி பஞ்சாலை. நீண்ட நாள்களாக மூடிக் கிடந்த ஆலையை கடந்த 1984-ல் திறக்க நடவடிக்கை எடுத்தது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திதான். மக்களிடம் கூறியபடி ரூ.20 கோடி ஒதுக்கி ஆலையை திறந்தார்.

  முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் வைத்திலிங்கம் ஆலை இயங்கினாலும், இயங்காவிட்டாலும், தொழிலாளர் குடும்பங்கள் பட்டினியால் வாடக்கூடாது என்பதற்காக ரூ.25 கோடி ஒதுக்கி ஊதியம் தரப்பட்டது.

  ஆனால் ஆலையை உடனே திறந்து இயக்குவோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த முதல்வர் ரங்கசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆலை உடனே மூடப்பட்டு விட்டது.

  பல போராட்டங்கள் நடத்தியும் முதல்வர் கவலைப்படவில்லை.

  1200 தொழிலாளர் குடும்பங்கள் வறுமையால் வாடுகின்றன. இதற்கு முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் அரசில் 2-வது யூனிட்டை நவீனப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். ஆலையில் உள்ள இயந்திரங்களை தற்போது விற்று வருகின்றனர். ஆலை மீண்டும் இயங்குவதாக கூறி உள்ளனர். ஆனால் அய்யன்குட்டிப்பாளையத்தில் உள்ள பிரிவில் 15 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர்.

  ஆலையை நவீனப்படுத்த மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதோடு மாநில அரசு நின்று விட்டது. நிதியை பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை., 2013-14ஆம் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி தர மத்திய அரசு தயாராக இருந்தது. ஆனால் ரூ.2 ஆயிரம் கோடி போதும் என முதல்வர் தெரிவித்து விட்டார் என்றார் நாராயணசாமி.

  வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கமணி, நிர்வாகிகள் குமார், கோபி, மஞ்சினி, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai