சுடச்சுட

  

  காரைக்கால் வளர்ச்சியை சிந்தித்து வாக்களியுங்கள்: நாஜிம் பிரசாரம்

  By காரைக்கால்  |   Published on : 22nd April 2014 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் வளர்ச்சியை சிந்தித்து வாக்களியுங்கள் என வாக்காளர்களை புதுவை தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.எச். நாஜிம் கேட்டுக் கொண்டார்.

  காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அவர் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து பேசியது: 20 ஆண்டுகளுக்கும் மேலாக காரைக்காலில் எம்எல்ஏவாக இருந்து, காரைக்கால் வளர்ச்சியில் அக்கறையுடன் பணியாற்றி வருகிறேன். மத்திய அரசின் நிதியுதவி, திட்டங்களின் மூலம் காரைக்கால் பல்வேறு நிலையில் வளர்ச்சி பெற வேண்டியுள்ளது. பேரவை உறுப்பினராக, அமைச்சராக, எதிர்கட்சித் தலைவராக இருந்து செய்த சேவைகள் பல இருந்தாலும், மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதன் மூலம் நிறைய திட்டங்களை காரைக்காலுக்கு கொண்டு வரமுடியும். இவற்றை என்னால் செய்ய முடியுமென நம்பிக்கையுடன் கூறிக் கொள்கிறேன். புதுச்சேரியில் ரங்கசாமிக்கும், நாராயணசாமிக்குமிடையே மோதல் இருந்து வருவதால், புதுவை வளர்ச்சியடையவில்லை. திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிடுபவர் பிரதமராக வருவார். அதனால் புதுவையிலிருந்து திமுக பிரதிநிதியாக நான் தேர்வு பெற்றால், புதுவையின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்றார் நாஜிம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai