சுடச்சுட

  

  தெரு நாய்கள் குறித்து தகவல் தர புதுவையில் கட்டுப்பாட்டு அறை

  By புதுச்சேரி,  |   Published on : 22nd April 2014 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் தெரு நாய்கள் நடமாட்டம் குறித்து தகவல் தர நகராட்சி சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் ராஜாமணிக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  புதுச்சேரியில் தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த நகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தெரு நாய்களுக்கு தீவிர கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து, பிடித்த இடத்திலேயே விட நகராட்சி கால்நடை மருத்துவ அதிகாரி மற்றும் எஸ்.பி.சி.ஏ. மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

  மேலும் வீதியில் விபத்துக்குள்ளான தெரு நாய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு புதுவை நகராட்சியில் உள்ள கால்நடை மருத்துவரின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் தெரு நாய்களை பிடித்து சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்பகுதியில் வசிப்போருக்கு இடையூறாக இருந்தால் உடனே கட்டுப்பாட்டு அறைக்கு அல்லது எஸ்பிசிஏ நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு புகார் தரலாம்.

  புகார் அளிப்பவர் தனது பெயர், முகவரி, தொடர்பு எண்ணை தர வேண்டும். அப்போது தான் உங்கள் பகுதிக்கு வந்து மேல் நடவடிக்கை எடுக்க முடியும். பொதுமக்கள் நேரில் வந்து புகார் அளிக்க வேண்டும் என நினைத்தால் புதுச்சேரி கம்பன் கலையரங்கம் பின்புறம் பழைய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்து புகார் தரலாம்.

  கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9443535255, எஸ்.பி.சி.ஏ. தொலைபேசி-9443253238.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai