சுடச்சுட

  

  தொழிலாளர்களை வஞ்சித்த காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ்

  By புதுச்சேரி,  |   Published on : 22nd April 2014 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தொழிலாளர்களை வஞ்சித்த பெருமை காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரசையே சேரும் என திமுக வேட்பாளர் குற்றம்சாட்டினார்.

  புதுச்சேரி திமுக வேட்பாளர் நாஜிம், உருளையன்பேட்டை தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீதி, வீதியாகச் சென்று பிரசாரம் செய்தார். அண்ணா சாலையில் முன்னாள் இளைஞரணி அமைப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவா தலைமையில் நுற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பைக்கில் ஊர்வலமாக வந்து வரவேற்பு அளித்தனர். இப்பிரசாரத்தின் போது நாஜிம் பேசியது:

  கண்டாக்டர் தோட்டம் பகுதியில் மக்களே வசிக்க முடியாத நிலை இருந்தது. அப்போது தொகுதி எம்எல்ஏ சிவாவும், எதிர்கட்சித் தலைவராக இருந்த நானும் பேரவையில் பேசி 1,400 வீடுகள் கட்ட ஒப்புதல் பெற்றோம். அங்குள்ள மக்கள் தற்போது நிம்மதியாக வாழ்கின்றனர்.

  காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்கள் செய்த தவறை பொறுத்துக்கொள்ள முடியாத மக்கள் ரங்கசாமி நல்லது செய்வார் என நினைத்து வாக்களித்தனர். ஆனால் அவர் தேர்தலில் அறிவித்த 30 கிலோ அரிசி கூட வழங்கவில்லை. 10 கிலோ அரிசியை 3 மாதம் மட்டும் வழங்கினார். அதற்கும் ரூ.7.50 பணம் வசூலித்துத்தான் கொடுத்தார். இது அடித்தட்டு மக்களை வஞ்சிக்கும் செயல். சட்டப்பேரவையில் கேட்டபோது நிதிப் பற்றாக்குறை என ரங்கசாமி கூறினார். மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திய சாதனை அவரையே சேரும்.

  புதுச்சேரியில் 120 தொழிற்சாலைகளை மூடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிய பெருமை ரங்கசாமிக்கும், நாராயணசாமிக்கும்தான் உண்டு. படித்த இளைஞர்கள் புதுச்சேரியை விட்டு வெளியேறி வேறு மாநிலம் சென்றுவிட்டனர். இதற்கு காங்கிரஸும், என்.ஆர்.காங்கிரஸும்தான் காரணம் என்றார் அவர்.

  மாநில அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வணங்காமுடி, இளைஞரணி அமைப்பாளர் முகமதுயூனுஸ், தொண்டரணி அமைப்பாளர் குணாதிலீபன், உருளையன் பேட்டை தொகுதி நிர்வாகிகள் தைரியநாதன், மாறன், குரு, பாபு, தர்மன், பி ரபாகரன்சாஸ்திரி, சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai