சுடச்சுட

    

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் இல்லையெனவும், புதுவை பாஜகவினர், மோடி ஆதரவாளர்கள் அனைவரும் பாமகவை ஆதரிப்பார்கள் எனவும் பாமக வேட்பாளர் ஆர்.கே.ஆர். அனந்தராமன் கூறினார்.

    நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல கிராமங்களில் திங்கள்கிழமை பிரசாரம் செய்தபோது அவர் பேசியது:

    புதுவை தொகுதி முழுவதும் பாமகவுக்கு வலுவான ஆதரவு உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சிகள் உள்ளன. இக்கூட்டணி வெளியிடும் தேர்தல் விளம்பரங்களில் என்.ஆர்.காங்கிரஸ் சின்னம் இடம்பெறவில்லை. ஆனால், புதுவை பாஜகவினர் என்.ஆர். காங்கிரஸை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர்.

    புதுவை தொகுதி முழுவதும் பாஜகவினர், நரேந்திரமோடி ஆதரவாளர்கள் பாமகவை ஆதரிப்பது நிச்சயம். நாங்கள் மோடியை பிரதமராக்க வேண்டியே வாக்கு சேகரிக்கிறோம்.

    நான் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், காரைக்காலில் ஜிப்மர் சார்பில் மருத்துவமனையை கொண்டு வருவேன். காரைக்காலுக்கான காவிரித் தண்ணீரை பெற பாடுபடுவேன். பழுதடைந்துள்ள கிராமப்புற சாலைகளை சீர்படுத்துவேன்.

    மத்திய அரசின் மூலம் புதுச்சேரி, காரைக்காலில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலான திட்டங்களை அமல்படுத்துவேன். புதுவையில் பாமக வெற்றிக்கு காரைக்கால் வாக்காளர்கள் முழுமையான ஆதரவை தரவேண்டும் என்றார்.

    கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலர் க.தேவமணி பிரசாரத்தில் பங்கேற்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai