சுடச்சுட

  

  ஆளும் கட்சி வேட்பாளர் வென்றால் தான் தேவையான நிதி பெற முடியும்: முதல்வர் ரங்கசாமி

  By புதுச்சேரி,  |   Published on : 23rd April 2014 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி தொகுதியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் வென்றால் தான் எளிதில் திட்டங்களை நிறைவேற்ற தேவையான நிதியைப் பெற முடியும் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

  பாகூர் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரம் நடந்தது. மின்துறை அமைச்சர் தி.தியாகராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி பேசியது:

  புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் அரசு சிறப்பாக செயல்படக்கூடாது என மத்திய அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியது. நமது மாநிலத்துக்கு தேவையான நிதியை தராததால் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.

  புதுவையில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இதற்கு மத்திய அரசு தான் காரணம். இந்நிலையை மாற்ற 5 ஆண்டுகள் சலுகை தர வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தேன்.

  ஆனால் மத்திய அரசு தரவில்லை. தேர்தல் நேரத்தில் புதுவையை முதன் மாநிலமாக மாற்றுவேன் என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறி வருகிறார். புதிய தொழிற்சாலைகள் தொடங்க வரிச்சலுகை பெற்றுத் தருவேன் எனக்கூறுகிறார்.

  ஒரு மாநிலத்தை முதன்மையாக மாற்ற மாநில அரசால் மட்டுமே முடியும்.

  புதுவையில் ஆளும் கட்சி வேட்பாளர் வென்றால் தான் மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியையும், திட்டங்களையும் பெற முடியும்.

  வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஜக்கு சின்னத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்

  என்றார் ரங்கசாமி.

  நிர்வாகிகள் சேதுராமன், தனவேல், செந்தில் உள்பட பலர் உடனிருந்தனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai