சுடச்சுட

  

  காரைக்காலில் ஆவணமில்லாத  பைபர் படகு பறிமுதல்

  By  காரைக்கால்  |   Published on : 23rd April 2014 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்காலில் ஆவணமின்றி பயன்படுத்திய பைபர் படகை கடலோரக் காவல் நிலைய போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
   காரைக்காலில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ளது. விசைப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடாமல் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. பைபர் படகுகளில் மட்டும் குறுகிய தொலைவு சென்று திரும்பும் வகையில் மீன்பிடி தொழிலை செய்துவருகின்றனர். தேர்தலையொட்டி, கடலோரக் காவல் நிலைய போலீஸார் அரசலாற்றங்கரையில் நிறுத்தப்பட்டிருந்த பைபர் படகுகளை சோதனையிட்டனர். ஒரு படகில், படகுக்குரிய எண் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, அந்தப் படகை சென்னையைச் சேர்ந்த பிரபு சுந்தர் என்பவர் காரைக்காலில் தங்கி இயக்கிவருவதாகத் தெரியவந்தது.
   அந்த நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். படகுக்குரிய எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. இதனால், அவரை கைது செய்த போலீஸார், படகையும் பறிமுதல் செய்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai