சுடச்சுட

    

    காரைக்காலில் இருந்து  கடத்த இருந்த 310 மது பாட்டில்கள் பறிமுதல்

    By  காரைக்கால்,  |   Published on : 23rd April 2014 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்காலில் இருந்து படகு மூலம் தமிழகப் பகுதிக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 310 மதுபாட்டில்களை கடலோரக் காவல் நிலைய போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
     காரைக்கால் கடலோரக் காவல் நிலைய போலீஸார் கடலோர கிராமங்களில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அக்கம்பேட்டை கடற்கரை அருகே சவுக்குத் தோப்பில் நின்றுகொண்டிருந்த இருவரை விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர்.
     இதையடுத்து, அந்தப் பகுதியை ஆய்வு செய்த போது, மதுபாட்டில்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் தரங்கம்பாடி புதுப்பேட்டையைச் சேர்ந்த உலகநாதன் (28), கஜேந்திரன் (26) என்பதும், படகு மூலம் தமிழகப் பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்துவதற்காக வாங்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.
     அங்கிருந்த 310 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து கடலோரக் காவல் நிலையம் கொண்டுவந்தனர். காவல் நிலைய ஆய்வாளர் மர்த்தினி, உதவி ஆய்வாளர் பிரவீண்குமார் ஆகியோர் அவற்றை பார்வையிட்டனர். மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்த இருவரையும் கைது செய்த போலீஸார், மதுபாட்டில்களை கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.
     புதருக்குள் மதுபாட்டில்கள்: நெடுங்காடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குளக்குடி ஆற்றங்கரையில் இருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்தனர்.
     அதிகாரிகளை பார்த்த அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். அவர்கள் நின்றிருந்த பகுதியில் புதரில் 360 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.
     
     
     
     
     
     
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai