சுடச்சுட

  

  காரைக்காலில் இருந்து படகில் தமிழகப் பகுதிக்கு கடத்த இருந்த மது பாட்டல்கள் பறிமுதல்

  By காரைக்கால்,  |   Published on : 23rd April 2014 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்காலில் இருந்து படகு மூலம் தமிழகப் பகுதிக்கு கடத்த மறைத்துவைத்திருந்த மதுபாட்டல்களை கடலோரக் காவல்நிலைய போலீஸார் பறிமுதல் செய்தனர்.

  காரைக்கால் கடலோரக் காவல்நிலைய போலீஸார் செவ்வாய்க்கிழமை கடலோர கிராமங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அக்கம்பேட்டை கடற்கரை அருகே சவுக்குத் தோப்பில் இருவர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். சந்தேகத்தின்பேரில் அப்பகுதியை பார்வையிட்டபோது, மதுபாட்டல்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

  விசாரணையில், தரங்கம்பாடி புதுப்பேட்டையை சேர்ந்த உலகநாதன் (28), கஜேந்திரன் (26) என்றும், படகு மூலம் தமிழகப் பகுதிக்கு மதுபாட்டல்களை கடத்துவதற்காக வாங்கிவைத்திருப்பதாக அவர்கள் கூறினர். 310 மதுபாட்டல்களை போலீஸார் பறிமுதல் செய்து கடலோரக் காவல்நிலையம் கொண்டுவந்தனர். காவல்நிலைய ஆய்வாளர் மர்த்தினி, உதவி ஆய்வாளர் பிரவீண்குமார், ஆகியோர் இதனை பார்வையிட்டனர். இவ்விருவரையும் கைது செய்த போலீஸார், மதுபாட்டல்களை கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.

  புதருக்குள் மறைத்துவைத்திருந்த மதுபாட்டல்கள் :  நெடுங்காடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது, குளக்குடி ஆற்றங்கரையில் இருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர்.  இவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் தப்பிவிட்டனர். அவர்கள் நின்றிருந்த பகுதியில் புதரில் 360 மதுபாட்டல்கள் இருந்தது தெரியவந்தது. இதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai