சுடச்சுட

  

  காரைக்காலில் பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிக்கும் நுண்ணிய பார்வையாளர்களுக்கு பயிற்சி

  By காரைக்கால்,  |   Published on : 23rd April 2014 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்காலில் பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிக்கும் நுண்ணிய பார்வையாளர்களுக்கு தேர்தல் நிர்வாகத்தால் பயிற்சி அளிக்கப்பட்டது.

  காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 154 வாக்குச் சாவடிகளில் 9 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடிகளை கண்காணிக்க மத்திய அரசு ஊழியர்களை நுண்ணிய பார்வையாளர்களாக நியமித்துள்ளனர்.

  இவர்கள் வாக்குச் சாவடிகளில் பணியாற்றக்கூடிய விதங்கள் குறித்து விளக்கும் பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. மாவட்ட  தேர்தல் பொது பார்வையாளர் எம்.அங்கமுத்து தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அ.முத்தம்மா, கூடுதல் ஆட்சியர் எல்.முகமது மன்சூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  வாக்குச் சாவடிகளுக்கு தேர்தலுக்கு முந்தைய நாள்கள் முதல் வாக்குப் பதிவு முடிந்து இயந்திரங்கள் வெளியேறும் வரை நுண்ணிய பார்வையாளர்கள் செயலாற்றவேண்டிய விதங்கள் குறித்து கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

  பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கென சிறப்பு படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பர், கேமரா மூலம் வாக்காளர்கள் கண்காணிக்கப்படுவர். நுண்ணிய பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் பணிகளை செம்மையாக செய்து அமைதியாக தேர்தல் நடந்திட ஒத்துழைப்பு தரவேண்டுமென கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai