சுடச்சுட

  

  காரைக்காலில் புதிய வாக்காளர்கள் காங்கிரஸை ஆதரிப்பார்கள்

  By காரைக்கால்  |   Published on : 23rd April 2014 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்காலில் புதிய வாக்காளர்கள் காங்கிரஸை ஆதரிப்பார்கள் என மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி  வாக்காளர்களுக்கு எழுதிய கடித நகலை வாக்காளர்களிடம் சேர்த்த கட்சி நிர்வாகி தெரிவித்தார்.

  புதுவை காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான வி.நாராயணசாமி ஜனநாயக திருவிழாவில் பங்கேற்று புதிதாக வாக்களிக்கும் இளைய சமுதாயத்திற்கு என் அன்பான வாழ்த்துகள் என்ற தலைப்பில் கடிதம் எழுதியுள்ளார். அதில் புதுச்சேரி மற்றும் காரைக்கால், மாஹே, யேனம் பிராந்தியங்களில் கடந்த 5 ஆண்டுகளில் தாம் செய்த சாதனைகள் குறி்த்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார்.

  காரைக்காலில் 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்களர்களுக்கு இக்கடிதத்தை சேர்க்கும் பணியை காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத் துறை தலைவர் எல்.எஸ்.பி.சோழசிங்கராயர் ஏற்றார்.

  காரைக்கால் மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இக்கடிதங்களை கொண்டு சேர்த்து முடித்த அவர் செவ்வாய்க்கிழமை கூறியது :  சுமார் 10 ஆயிரம் கடித நகல்கள் காரைக்காலுக்கு வந்தன. இவைகள் பெரும்பான்மையாக  கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிறுபான்மைத் துறை பொறுப்பேற்று கொண்டு சேர்த்துள்ளது. இளைய சமுதாயத்தினருக்கு ஏற்ற வகையில் காரைக்காலில் என்.ஐ.டி., கேந்திரிய வித்யாலயா, புதுவை பல்கலைக்கழக கிளைக்கான கட்டடம், கடல்சார் பல்கலைக்கழக பிராந்திய வளாகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் நாராயணசாமியால் கொண்டுவரப்பட்டுள்ளது.

  இவையாவும் புதிய வாக்காளர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. நாராயணசாமியின் நகல்களை கொண்டு சேர்க்கும்போது அவர்களது கருத்துகள் காங்கிரஸூக்கு ஆதரவாக இருந்தது மகிழ்ச்சியை தருகிறது. புதிய வாக்காளர்கள் நிச்சயம் காங்கிரஸை ஆதரிப்பார்கள் என்ற நம்பி்க்கை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai