சுடச்சுட

    

    குடிசைமாற்று வாரிய தலைவர் மீது புதுவையில் தேர்தல் விதிமீறல் வழக்கு

    By புதுச்சேரி,  |   Published on : 23rd April 2014 09:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் வாக்காளர்களுக்கு துண்டுகளை சால்வையாக அணிவித்து வாக்கு சேகரித்ததாக குடிசைமாற்று வாரியத் தலைவர் மீது போலீஸார் தேர்தல் விதிமீறல்  வழக்குப் பதிவு செய்தனர்.

    புதுவை லாஸ்பேட்டை சாமிப்பிள்ளைத்தோட்டம் பகுதியில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அக்கட்சியினர் திங்கள் கிழமை வாக்கு சேகரித்தனர்.

    லெனின் நகர் பகுதியில், குடிசை மாற்று வாரியத் தலைவர் மதி என்கிற வெங்கடேசன் தலைமையில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்த என்ஆர் காங்கிரஸார், அப்பகுதிவாசிகளுக்கு துண்டுகளை சால்வையாக அணிவித்து வாக்கு சேகரித்ததாகத் தெரிகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி கோமன் ராஜாஜி, என்ஆர் காங்கிரஸார், வாக்காளர்களை கவரும் விதத்தில் இலவசமாக துண்டுகள் வழங்கியதாக போலீஸில் புகார் கொடுத்தார்.

    இதன் பேரில் லாஸ்பேட்டை போலீஸார், புதுவை குடிசை மாற்று வாரியத் தலைவர் மதி என்கிற வெங்கடேசன், லெனின் நகரைச் சேர்ந்த என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் சரவணன் ஆகியோர் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai