சுடச்சுட

  

  தீயணைப்பு சேவை வார போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசளிப்பு

  By காரைக்கால்,  |   Published on : 23rd April 2014 09:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தீயணைப்பு சேவை வாரத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அ.முத்தம்மா பரிசு, சான்றிதழை வழங்கினார்.

  புதுச்சேரி அரசின் காரைக்கால் தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு சேவை வாரம் அண்மையில் கடைபிடிக்கப்பட்டது. காரைக்கால் நிலையம், திருநள்ளாறு தீயணைப்பு நிலையத்தார், தீவிபத்தை தடுக்கும் வகையில் மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கட்டுரை உள்ளிட்ட போட்டிகளை நடத்தினர்.

  இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அ.முத்தம்மா, மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில் காரைக்கால் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜே.விவேகானந்தன், திருநள்ளாறு நிலைய அதிகாரி எம்.ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai