சுடச்சுட

  

  புதுவையில் தேர்தல் பிரசாரம் நிறைவு: வாக்காளர்களை கவர கட்சிகள் தீவிரம்

  By புதுச்சேரி,  |   Published on : 23rd April 2014 09:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் தேர்தல் பிரசாரங்கள் நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்டமாக வாக்காளர்களைக் கவரும் பணியில் அரசியில் கட்சியினர் தீவிரம் காட்டியுள்ளனர்.

  புதுவையில் மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரங்கள் செவ்வாய்க்கிழமை மாலையோடு நிறைவு பெற்றது. பிரசாரங்களை நிறைவு செய்த அரசியில் கட்சியினர், வாக்குகளை பெற்றிட அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

  மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளிலும், தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள், அந்தத் தொகுதியில் உள்ள கட்சியினரின் வாக்குகளை உறுதிப்படுத்தவும், அணி மாறும் வாக்காளர்களை தக்க வைத்துக்கொள்ளவும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

  காலாப்பட்டு, நெல்லித்தோப்பு, ஏம்பலம், பாகூர் உள்ளிட்ட பல தொகுதிகளில் திங்கள் கிழமை இரவே அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவர்வதற்கு, அவர்களை கவனிக்கும் வேலையில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதே போல், இதர தொகுதிகளிலும் மக்கள் சிலர் கட்சியினரை ஆவலோடு எதிர்பார்க்கும் அவல நிலையே தெரிந்தது.

  நேரடிப்போட்டியில் உள்ள ஆளும், எதிர் கட்சியினர் ஓட்டுக்கு தலா ரூ.100 முதல் ரூ.500 வரை வழங்கி வருவதாக மக்கள் பரவலாகப் பேசினர். தங்கள் பகுதிகளுக்கு எப்போது வருவார்கள் என்ற எதிர்பார்ப்பே பலரது பேச்சுக்களில் தெரிந்தது.

  புதுவையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனைகள் மேற்கொண்டு வரும் நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவரும் பணிகளை, இரவு நேரங்களில் சாதூர்யமாக செய்து வருகின்றனர்.

  ஓட்டுக்கு பணம் வழங்குவதை எந்த கட்சிகளும் காட்டிக்கொடுக்கவும் விரும்பவில்லை எனத்தெரிவதால், அரசியல் கட்சியினர் தங்கள் பகுதி வாக்காளர்களை கவனிக்கும் பணியில் மும்புறமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  இதனால் ஓட்டுக்கு பணம் பெறுவது குற்றம் என்ற தேர்தல் துறையின் விழிப்புணர்வு பணிகளை, வழக்கம் போல் காற்றில் பறக்கும் நிலையை மக்கள் ஏற்படுத்தியுள்ளதாக, பொது நலன் விரும்பிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai