சுடச்சுட

  

  புதுவை அனைத்து பிராந்தியங்களின் முன்னேற்றத்திற்கும் பணியாற்றுவேன்: அதிமுக வேட்பாளர் எம்.வி. ஓமலிங்கம் வாக்குறுதி

  By காரைக்கால்,  |   Published on : 23rd April 2014 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையின் எல்லா பிராந்தியங்களிலும் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதில் 5 ஆண்டுகள் தனது சேவை முழுமையாக இருக்கும் என்றார் புதுவை தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.வி. ஓமலிங்கம்.
  காரைக்கால் பகுதியில் பூவம் தொடங்கி, வாஞ்சூர் வரை 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த அவர் கூறியது:
  புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனம் பிராந்திய மக்களுக்கு வெவ்வேறு வகையான வளர்ச்சித் திட்டங்கள் தேவைப்படுகிறது. புதுச்சேரி, காரைக்கால் மக்கள் ரங்கசாமி ஆட்சியால் பல்வேறு நிலையில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அண்டை மாநிலமான தமிழகத்தில் கிடைக்கும் நலத்திட்ட உதவிகள் புதுவையில் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் உள்ளது.
  தமிழக முதல்வர், புதுவையின் வளர்ச்சியிலும், புதுவை பிராந்தியங்களில் மக்களுக்குத் தேவைப்படும் திட்டங்களை அமல்படுத்துவதிலும் தனி கவனம் செலுத்துவோம் என கூறியுள்ளார். குறிப்பாக, வேலைவாய்ப்பை உருவாக்குதல், விலைவாசி கட்டுக்குள் இருப்பது, பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தடுப்பது, கல்வியை மேம்படுத்துவது, காரைக்காலில் சுகாதார வசதியை பெருக்குவதில் அதிமுக தனி கவனம் செலுத்தும்.
  அதிமுக மீது வாக்காளர்கள் பாசம் கொண்டுள்ளனர். புதுவை தொகுதியில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை முன்பே ஏற்பட்டுவிட்டது. அதிமுக இந்தத் தொகுதியில் வெற்றிபெற்ற பிறகு அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார் ஓமலிங்கம்.
  சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வி.கே. கணபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தில் பங்கேற்றனர்.   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai