சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலையொட்டி புதுவையில் நடைபெற்ற வாகனச் சோதனையில் காரில் எடுத்துச் சென்ற ரூ.1 கோடி பணத்தை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

  புதுவை முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீஸார் சின்னக்கடை மார்க்கெட் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுவையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற வாடகை காரை அவர்கள் சோதனை செய்தனர்.

  இதில், ஆவணங்களின்றி ரூ.1 கோடி பணம் எடுத்துச் சென்றது தெரிந்தது. சந்தேகமடைந்த போலீஸார், காரில் வந்த திவ்யபிரவீன், பிலவேந்திரன் ஆகியோரிடம் விசாரித்தனர். விசாரணையில் வங்கியிலிருந்து பணம் எடுத்துச் செல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீஸார், முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் புதுவையில் உள்ள சவுத் இந்தியன் வங்கியிலிருந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அதே வங்கிக் கிளைக்கு பணம் எடுத்துச் செல்வது உறுதியானது. இதனையடுத்து, உரிய ஆவணங்களைக் கொடுத்து பணத்தை எடுத்துச் செல்லுமாறு வங்கி ஊழியர்களிடம் போலீஸார் தெரிவித்தனர். தகவலறிந்த புதுவை வங்கி அதிகாரிகள் ஆவணங்களுடன் வந்தனர். அவற்றைச் சரிபார்த்த முத்தியால்பேட்டை போலீஸார், அதன் பின் பணத்தையும், காரையும் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai