சுடச்சுட

  

  100 நாள் வேலை திட்டத்தை என்.ஆர். காங்கிரஸ் அரசு முறையாக செயல்படுத்தவில்லை: திமுக

  By புதுச்சேரி,  |   Published on : 23rd April 2014 09:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் 100 நாள் வேலை திட்டத்தை என்.ஆர். காங்கிரஸ் அரசு முறையாக செயல்படுத்தவில்லை என திமுக வேட்பாளர் எச்.நாஜிம் புகார் கூறியுள்ளார்.

  நெட்டப்பாக்கம் பகுதியில் அவர் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த பேசியதாவது:

  புதுவையில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் மேம்பாட்டுக்காக சிறப்பு உட்கூறு திட்ட நிதி ஒதுக்கப்பட்டது. 16 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டதில் ஆதிதிராவிடர் பொருளாதாரம் மேம்படவும், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்யவும் முடியும்.

  ஆனால் முதல்வர் ரங்கசாமி சிறப்பு உட்கூறு நிதியை வேறைதுறைகளுக்கு திருப்பி செலவிட்டுள்ளார். இதனால் ஆதிதிராவிட இனத்தவருக்கான பலன்கள் போய்ச் சேரவில்லை.

  மத்திய அரசின் 100 நாள்கள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. கிராமப்புற மக்கள் பொருளாதார ரீதியில் மேம்பட இத்திட்டம் உதவிகரமாக உள்ளது.

  ஆனால் அத்திட்டம் புதுவையில் சீராக செயல்படுத்தப்படவில்லை.

  எந்த கிராம மக்களுக்கும் 100 நாள்கள் வேலை தரவில்லை. கூலித்தொகையும் முறையாக வழங்கப்படவில்லை. திமுக வெற்றி பெற்றால் 100 நாள்கள் திட்டம்

  செம்மையாக செயல்படுத்தப்பட்டு கூலித்தொகையை முழுமையாக தரப்படும் என்றார் நாஜிம்.

  மாநில அமைப்பாளர் டாக்டர் சுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி அரசு.

  வணங்காமுடி உள்பட பலர் உடன் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai